Computer Courses, office automation course, dot net, sql, oracle, java in chennai, Typewriting, Shorthand, Spoken English, Tally Sales, Tally Support, Nanganallur Chennai
SCHOOL SYLLABUS | 10TH MODEL EXAM  |  WEBSITE DEVELOPMENT | EXAM RESULTS |  FREE ONLINE TUTORIALS | தோல்வியும் வெற்றியே கருத்துக்களம் 
computer courses
computer courses nanganallur

மாணவர்கள் வெற்றிபெற 8 உறுதிமொழி - கலாம்

  • உனக்குள் ஓர் அரும்பெரும் சக்தி உள்ளது. அதில் வெற்றி எண்ணத்தை வளர்த்து உன் சக்தியால் வெற்றி அடைந்தே தீரவேண்டும்.

  • ஒவ்வொரு நாளும் ஆசிரியர் சொல்லும் பாடங்களை அன்றைய இரவே படிக்க வேண்டும்.

  • அறிவு பெட்டகமாக திகழும் உன் ஆசிரியர்களின் வாழ்வுமுறையை தெரிந்து அவர்களை மதித்து நடக்க வேண்டும்.

  • பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்க வேண்டும்.

  • நீ பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

  • நீ வெற்றிபெற்று மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி மகிழவேண்டும்.

  • உன் வீட்டில் ஒரு சிறு நூலகம் அமைத்து தினமும் 30 நிமிடமாவது புத்தகங்களை படிக்க வேண்டும்.

  • பிரச்சனைகளை கண்டு பயப்படக்கூடாது. தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து விடாமுயற்சியுடன் உன்னத லட்சியத்தை அடைய வேண்டும். வெற்றிக்கு மூலக்காரணமான அறிவு, உழைப்பு, தைரியம், விடாமுயற்சியை பின்பற்றவேண்டும்.

பார்வையற்ற சிறுவனுக்கு கலாமின் அறிவுரை

வாழ்க்கையில் வெற்றிபெற மிகப்பெரிய லட்சியம் வேண்டும்; சிறு லட்சியம் குற்றமாகும். அறிவை தேடி தேடி பெற வேண்டும். லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சி வேண்டும்.

மாணவர்களுக்கு கலாம் கூறிய கவிதை
நான் பறந்து கொண்டே இருப்பேன்.
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்.
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்.
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்.
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த.
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்.
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற மன உறுதியுடன்.
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க.
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவேமாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.




HOME
KIDS COURSES
OUR STUDENTS
COMPUTER COURSES
SPECIALIST COURSES
BOOKS PUBLISHERS
TYPEWRITING
VIDEO TUTORIALS
அறிஞர்களின்​​ பொன்​மொழிகள்
HEALTH TIPS
TIME FOR RELAX
JOKES
MANTRAS FOR AGING
ABOUT US
CONTACT US
 
© NATIONAL3C.ORG - ALL RIGHTS RESERVED